சென்னையில் நேற்று இபிஎஸ் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது. அதில் ஓபிஎஸ் அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நீக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் ஓபிஎஸ் தலைமையில் பொதுக்குழு நடந்துள்ளதாக அதிமுக முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “ஓபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.. இலை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இபிஎஸ் நீக்கப்பட்டு கே சி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அதிமுகவில் புதிய பரபரப்பு கிளப்பியுள்ளது.
ஓபிஎஸ் @OfficeOfOPS தலைமையில் பொதுக்குழு. புதிய மாவட்டச் செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் கிளை செயலாளர்கள் நியமனம். இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி கே பழனிசாமி நீக்கப்பட்டு கே சி பழனிச்சாமி @KCPalanisamy1 இணை ஒருங்கிணைப்பாளராக நியமனம்??
— aspire Swaminathan (@aspireswami) July 11, 2022