விக்ரம் படத்தை பிரபல இயக்குனர் பாராட்டியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 440 கோடி வரை வசூல் சாதனை செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த பலரும் விக்ரம் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் விக்ரம் படத்தை புகழ்ந்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/prashanth_neel/status/1546423023787732994
அதில் விக்ரம் பட குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய 3 பேரையும் ஒரே திரையில் காண்பது கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. இதனையடுத்து அனிருத் எப்போதும் ஒரு ராக்ஸ்டார் ஆவார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு படங்களுக்கு எப்பொழுதும் நான் மிகப்பெரிய ரசிகன் என்றும், சண்டை பயிற்சி இயக்குனர் அன்பழகனை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் பதிவிட்டுள்ளார்.