Categories
தேசிய செய்திகள்

TCS நிறுவனத்தின் ஊழியர்களுக்கு…. 5 முதல் 8% சம்பளம் உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

பிரபல நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலக அளவில் கொரோனா பெருந்தொற்று பரவி அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்ட போதிலும் ஐடி நிறுவனங்கள் மட்டும்தான் செயல்பாட்டில் இருந்தது. இந்தத் துறையில் கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்புகள் அதிகரித்ததோடு, சம்பள உயர்வும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐடி நிறுவனங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் புதிதாக இளைஞர்களை பணிக்கு அமர்த்தி வருகின்றனர். கடந்த 2 வருடங்களில் இல்லாத அளவுக்கு டி.சி.எஸ், ஹச்.சி.எல், இன்போசிஸ் உள்ளிட்ட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் 1 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிண்ட் லக்காட் விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வானது 5 முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்கப் பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த காலாண்டுக்கு பிறகு 14,000 ஊழியர்கள் புதிதாக எடுக்கப்பட்டுள்ளனர். மேலும் டிசிஎல் நிறுவனத்தில் மொத்தம் 6,06,331 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.

Categories

Tech |