இந்திய வங்கிகளில் பண மோசடி செய்து விட்டு தப்பிய விஜய் மல்லையாவிற்கு நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் 4 மாதங்கள் ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவில் தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்து விட்டு லண்டனுக்கு தப்பினார். அதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் வருடத்தில் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தன் பிள்ளைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
இது குறித்து அவர் நீதிமன்றத்திடம் தெரிவிக்காததால், உச்ச நீதிமன்றம் அவருக்கு நான்கு மாதங்கள் ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை வட்டியோடு இன்னும் 28 நாட்களுக்குள் திரும்ப செலுத்தி விட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.