Categories
தேசிய செய்திகள்

தொடரும் கனமழை…. பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் பருவமழை தொடங்கி  பல்வேறு மாநிலங்களில்  கனமழை பெய்து வருகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் தற்போது  கனமழை பெய்து வருகிறது.  மழையினால் ஏற்பட்ட பாதிப்பு, பல்வேறு நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி இடைவிடாத பெய்து வரும் மழையினால் உயிர் மற்றும் உடைமை சேதங்களை தடுப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்க வேண்டும் என்று அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் முதல்வர் அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதிக மழை பெய்து வரும் நிஜாமாத், ஜெய்சங்கர் பூபாலப்பள்ளி மற்றும் கொத்தகுடெம் மாவட்டங்களில் சிறப்புக்கான செலுத்த கூடிய வகையில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில DRF, பிற மீட்பு குழுக்கள் , ஹெலிகாப்டர்களை மீட்பு நடவடிக்கைகளுக்கு அனுப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் மாநில அளவிலான கட்டுப்பாடு அறையமைத்து மாவட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மழை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சோமேஷ் குமாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கன மழை பெய்யும் மாவட்டங்களில் அவசர தேவை ஏற்படும் வரை மக்கள் வெளியில் செல்ல வேண்டும் என்றும் பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜூலை 11ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |