குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் கட்டணம் இன்றி குழந்தை பெயரை பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்த தேதியிலிருந்து ஓராண்டுக்கும் கூடுதலானால் கால தாமத கட்டணம் 200 ரூபாய் செலுத்தி குழந்தை பெயரை பதிவு செய்து கொள்ளலாம். குழந்தை பிறந்து பதிவு செய்த தேதியில் இருந்து 15 வருடங்களுக்குள் மட்டுமே பெயர் பதிவு செய்ய இயலும். 15 வருடங்கள் மேல் பதிவு செய்ய இயலாது. எனவே 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்னர் பிறந்த பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் மற்றும் குழந்தை பிறப்பு பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியான பிறப்பு பதிவுகளுக்கு குழந்தையின் பதிவு செய்ய வருகின்ற 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பள்ளி, பணியில் சேர,வெளிநாடு செல்ல என அனைத்திற்கும் தேவைப்படும் பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் பலரும் எண்ணற்ற சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதனைப் போக்கும் விதமாக பிறந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் பிறப்பை பதிவு செய்ய தவறியவர்களுக்கு வருகின்றார் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி உரிய படிவத்தில் விண்ணப்பித்து காலதாமதம், நகல் ஆகியவற்றிற்கு. தலா 200 ரூபாய் கட்டி பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.