இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது திருமண வாழ்க்கை குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய எஸ்ஏசி, தற்போது “யார் இந்த எஸ்.ஏ.சி”என்ற யூடியூப் சேனலை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் தனது யூடுப் சேனலில் தனது வாழ்க்கை வரலாறு மற்றும் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றார். இந்த நிலையில் தற்பொழுது தனது திருமணம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ஒரு சினிமா ஷூட்டிங்கில் எனது மாமா நடிகர் சிவாஜியிடம் எனது திருமணத்திற்கு தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கும்படி கூறினார்.
அதை ஏற்றுக்கொண்ட சிவாஜியும் தான் வருவதாக சம்மதித்தார். பின் நான் திருமண வேலைகளை கவனித்துக் கொண்டே உதவியியக்குனராக பணிபுரிந்து வந்தேன். அந்த காலத்தில் கைலாஷ் சில்க்ஸ் என்ற ஒரு கடை உண்டு. ஏழைகள் துணியை எடுத்துக்கொண்டு தவணை முறையில் பணம் செலுத்தலாம். அப்போது நான் எனது திருமணத்திற்கு துணி எடுக்கும் பொழுது எனக்கு ஐம்பது ரூபாய் கோர்ட் சோபாவுக்கு 100 ரூபாய் புடவை தவணை திட்டத்தில் எடுத்தேன். திருமணத்திற்கு முதல் நாள் வரை நான் ஷூட்டிங் இருந்தேன். அப்போது சிவாஜி என்னிடம் வந்து, என்னடா நாளைக்கு கல்யாணமா என்று கேட்டார்.
நான் ஆமாம் என்று சொல்லிவிட்டு கூடவே கமலம்மா தாலி எடுத்து கொடுத்தா நல்லா இருக்கும் என கூறியதற்கு அவர் அப்ப நான் எடுத்துக் கொடுத்தால் நல்லா இருக்க மாட்டியா என கேட்டார். அதற்கு நான் உங்கள் தலைமையில் அம்மா தாலி எடுத்துக் கொடுக்கட்டும் என கூறியதற்கு அவரும் சம்மதம் என கூறினார். பின் திருமணத்தன்று அம்மா, அண்ணன் எல்லோரும் வந்தார்கள். ஆனால் கடைசிவரை என் அப்பா வரவே இல்லை. பின் கமலா அம்மா தாலி எடுத்துக் கொடுக்க நான் ஷோபா கழுத்தில் தாலி கட்டினேன். ஆனால் சோபா எனது மனைவி இல்லை. திருமணமான முதல் வருடம் விஜய் பிறந்தான். அப்போதும் சோபா எனது மனைவி இல்லை. விஜய்க்கு அம்மா என்ற ஸ்தானத்திலிருந்து அடுத்த ஐந்து வருடங்களில் வித்யா பிறந்தாள்.
அப்போதும் விஜய் மற்றும் வித்யாவின் அம்மா சானத்தில் தான் சோபா இருந்தால். அவள் எனக்கு மனைவி இல்லை என்று சொன்னதால் தவறாக எண்ண வேண்டாம். திருமணமானாலும் நாங்கள் காதலர்கள் ஆக இருக்கின்றோம். நான் முரட்டு பையன். கோபக்காரன் என சொல்லுவார்கள். ஆனால் நான் எப்படிப்பட்டவன் என ஷோபாவுக்கு நன்றாக தெரியும். பலமுறை அவளை நான் அடித்திருக்கின்றேன். வேறு ஒருவராக இருந்தால் என்னை விட்டு சென்றிருப்பார்.
ஆனால் ஷோபா அப்படி இல்லை. அவள் இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் அவள் இல்லை. அடித்து விட்டாலும் நான் அவளிடம் சென்று மன்னிப்பு கேட்பேன். உடனே அவள் அனைத்தையும் மறந்து விட்டு புது காதலனாக என்னை ஏற்றுக் கொள்வாள். என்னுடைய எனர்ஜியே அவள் தான். கடவுளிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கின்றேன். அவளது காதலாக இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடைசி வரை காதலனாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் காணொளியில் நெகிழ்ச்சியாக ஷோபா குறித்து பேசி உள்ளார்.