தமிழகத்தில் சுகாதார செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 4,308 காலி பணியிடங்கள் வருகின்ற செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிரப்பப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . தடுப்பூசி பயன்பாட்டால் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் தற்போது ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Categories
4,308 பணியிடங்கள்…. செப்டம்பர் மாதத்திற்குள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
