நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் பத்து ரூபாய்க்கு கூல்டிரிங்ஸ் வாங்கியுள்ளார். அதில் பாட்டிலுக்குள் ஏதோ ஒன்று இருந்ததை கண்ட அவர் பாட்டிலை திறந்து பார்த்துள்ளார். அப்போது பாட்டிலுக்குள் புழுக்கள் நெழிந்து கொண்டிருந்தன. கடைக்காரரிடம் இது குறித்து கேட்டதற்கு கடையின் உரிமையாளர் நாங்கள் வாங்கி வருவதோடு சரி குளிர்பான ஏஜெண்டுகள் தான் இதற்கு பொறுப்பு என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் காலாவதியான கெட்டுப்போன குளிர்பானங்களை வாங்கி மக்கள் குடிப்பதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் எனவும் இதற்கு உணவு பாதுகாப்பு துறை கூறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.