Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் விரைவான முன்னேற்றத்திற்கு…. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை…!!!

குஜராத்தில் சூரத் நகரில் இயற்கை விவசாயம் சார்ந்த கூட்டத்தில் காணொளி மூலம் பிரதமர் மோடி இன்று மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன இந்த தருணத்தில், பல்வேறு இலக்குகளை நோக்கி நாடு பணியை தொடங்கியுள்ளது. வரவிருக்கிற நாட்களில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான அடித்தளமாக அது இருக்கும் என்று அவர் கூறினார். அதனைதொடர்ந்து நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரின் முயற்சிக்கான உணர்வு அடித்தளமாக இருக்கும். அதுவே நமது வளர்ச்சிக்கான பயணத்தின் வழிகாட்டியாக இருந்து வருகிறது.

இதனையடுத்து கிராமங்கள் மற்றும் ஏழை மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கான பெரும் பொறுப்பு நாட்டு மக்களுக்கும் மற்றும் கிராம பஞ்சாயத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. உங்களிடம் முயற்சி மற்றும் உங்களது அனுபவம் ஆகியவற்றால் வருகிற நாட்களில் நாடு முழுவதும் விவசாயிகள் நிறை விசயங்களை பற்றி புரிந்து கொள்வார்கள். மேலும் சூரத்தில் இருந்து வெளிப்பட இருக்கும் இயற்கை விவசாய மாதிரியானது, ஒட்டுமொத்த இந்தியாவுக்கான மாதிரியாக மாறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |