இந்தியா – இங்கிலாந்து இடையான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ரோஸ் பவுல் மைதானத்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பர்மிங்காமில் நடைபெறுகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 50ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை போன்று இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என இங்கிலாந்தும் இருப்பதால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. 171 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் பந்திலே அதிர்ச்சி காத்திருந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலே ஜேசன் ராய் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அதே போல 3ஆவது ஓவரை வீசிய புவனேஷ்குமார், 3ஆவது பந்தில் ஜோஸ் பட்லரை 4ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். டேவிட் மாலன் 19, லியாம் லிவிங்ஸ்டன் 15, ஹாரி புரூக் 8, மொயின் அலி 35, சாம் கர்ரன் 2, கிறிஸ் ஜோர்டன்ரன் 1, ரிச்சர்ட் க்ளீசன் 2, மேத்யூ பார்கின்சன் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க டேவிட் வில்லி 33* மட்டும் களத்தில் இருந்தார்.
இதனால் அந்த அணி 17ஓவர்களில் 121ரன்னுக்கு அணைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 49 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் தலா 2விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா, ஹர்ஷல் படேல் தலா 1விக்கெட்டும் வீழ்த்தினர்.