Categories
மாநில செய்திகள்

நேத்து தான் கேட்டாங்க…. இன்னைக்கு செஞ்சிட்டாரு…. அதிரடி காட்டிய முதல்வர்….!!!!!

முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருவண்ணாமலைக்கு சென்றார். அப்போது செல்லும் வழியில் செஞ்சியில் முருகன் என்பவருடைய மகன் வாசன் மற்றும் மகள் பூஜா ஆகியோர் முதல்வரை சந்தித்து தங்களுக்கு கடந்த ஏழு வருடங்களாக பட்டியலின வகுப்பு சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கிறது என்று புகார் மனு அளித்தனர். மேலும் தங்களுக்கு வகுப்பு சான்றிதழ் வழங்கிட ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதனை கருணை உள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர் உரிய விசாரணை மேற்கொண்டு பட்டியலின வகுப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கும் என்று வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு திருவண்ணாமலையில் அரசு விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் முதல் ஸ்டாலின் இன்று மாணவன் வாசன் மற்றும் மாணவி பூஜை ஆகியோருக்கு பட்டியலின வகுப்பு சான்றுகளை வழங்கினார்.

Categories

Tech |