இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே மூன்று டி20 போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி நடத்தப்படுகிறது. சவுத்தம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் இந்திய அணி முதலில் பேட்டிங்கில் இறங்கியது.
சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இந்தியா அதன் பின் சொதப்பியதால் அடுத்தடுத்து மூன்று விக்கெடுகளை இழந்தது. முதலில் பேட்டிங் செய்த ரோஹித், பண்ட் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இங்கிலாந்தின் ரிச்சர்ட் கிலீசன் வீசிய பந்தில் முதலில் ரோஹித் சர்மா 31 ரன்கள் எடுத்து அவுட்டனர். அதைத் தொடர்ந்து 26 ரன்களில் பண்ட் அவுட்டாக அதை அடுத்து களமிறங்கிய கோலி ஒரு ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமீப காலமாக மோசமான பேட்டிங் செய்து வந்த விராட் கோலி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான பேட்டிங் தர வரிசை பட்டியலில் ஆறு வருடங்களுக்கு பின்பு முதல்முறையாக டாப் 10 இடத்தை இழந்துள்ளார். தற்போது 13வது இடத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். விராட் கோலி வரும் டி20 தொடர்களில் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்திருந்தார். சிறப்பாக விளையாடாத கோலி அணியில் தொடர்ந்து நீடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது சவாலாக உள்ளது.
ஒரு வீரர் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் சொதப்பினால் அவர் எத்தனை பெருமை உடையவராக இருந்தாலும் தொடர்ந்து விளையாட வாய்ப்பு வழங்க முடியாது என்று கபில்தேவ் கூறி இருந்தார். இதை உண்மையாக்கும் விதமாக தொடர்ந்து விராட் கோலி பேட்டிங்கில் சொதப்பி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. கபில்தேவ் சொன்னது உண்மையாகி விடுமோ? என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கங்களை twitter பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.