Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்…. சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

அடிக்கடி நேரும் விபத்துகளால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள கம்மாபுரம் பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்டோர் வேனில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கருக்கை கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் கார்குடல் கிராமம் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் கம்மாபுரம் பகுதியில் வசிக்கும் ராஜமாணிக்கம், வேல்முருகன், சுப்பிரமணியம், பழனியம்மாள் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த கார்குடல் கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் கிராம மக்கள் சாலையை உடனடியாக தரம் உயர்த்தக் கோரி கோஷம் எழுப்பி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கம்மாபுரம் விருத்தாசலம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |