இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர் இதை தொடர்ந்து மே 9ஆம் தேதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேயும் ஜூன் 9ஆம் தேதி முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேயும் பதவி விலகினர். இன்று இலங்கையில் பெரும் போராட்டம் வெடித்து வரும் நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு சொகுசு கப்பல் வழியாக தப்பி ஓடினார்.
இந்நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். அனைத்து கட்சிகள் ஆட்சி அமைக்கும் விதமாகவும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்காலிக அதிபராக சபாநாயகர் அபயவர்த்தன பதவியேற்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.