உலகப் புகழ்பெற்ற பணக்காரரின் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக அறிவித்தார். ஆனால் டுவிட்டரில் 5% போலியான கணக்குகள் இருப்பதால் அதற்குரிய உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே ஒப்பந்தம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என எலான் மஸ்க் கூறினார். இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 998 டாலராக இருந்தது.
இதனையடுத்து நேற்று எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக கூறியதை அடுத்து டெஸ்லாவின் பங்கு 752 டாலராக சரிந்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் மஸ்கின் சொத்து மதிப்பானது 340 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் கடந்த மாதம் 197 மில்லியன் ஆக குறைந்துள்ளது. மேலும் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதாக அறிவித்தது முதல் அவருடைய சொத்து மதிப்பானது 65 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.