தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் இருந்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்தாம் வகுப்பு தோல்வி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அந்தப் பதிவை தொடர்ந்து புதுப்பித்து கடந்த ஜூன் 30 வரையுள்ள நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை என்று காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் மட்டும் போதும் .
மேலும் இன்ஜினியரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம்,பிஎஸ்சி நர்சிங் போன்ற தொழில் பட்டய படிப்புகள் முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 22 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக உதவித்தொகை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 2022 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும்,இதர இனத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயது கொள்ளும் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் வேலை வாய்ப்ப அடையாள அட்டையை ஆதாரமாக காட்டி விண்ணப்பிக்கலாம்.
அதன்படிசேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாவட்ட தொழில்நெறி வழிகாட்டுதல் அலுவலகம் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதன் மூலம் பத்தாம் வகுப்பு முடித்த அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் நேரில் அல்லது https://employment exchange.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.