இலங்கையில் மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருப்பதால், அதிபர் கோட்டபாய ராஜபக்சே கப்பலில் தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் கொந்தளித்த மக்கள் அரசாங்கத்தின் மீது தங்களின் கோபத்தை காட்ட தொடங்கியிருக்கிறார்கள். நாடு முழுக்க மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபரின் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்தனர்.
எனவே, நாடு மீண்டும் உச்சகட்ட பதற்றத்தில் இருக்கிறது. இன்னிலையில் அதிபர் கோட்டபாய ராஜபக்சே உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவரின் கட்சியை சேர்ந்த எம்பிக்களே வலியுறுத்தியிருக்கிறார்கள். இதனிடையே அதிபர் கோட்டபாய ராஜபக்சே, கப்பலில் தப்பி சென்ற வீடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. அவர், வெளிநாட்டிற்கு சென்று விடுவார் என்று கூறப்படுகிறது.