Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு பெரிய அதிர்ச்சி…..  தாறுமாறாக உயர்ந்த சாப்பாடு விலை?….. காரணம் இதுதான்….!!!!!

ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பான சர்ச்சைக்கு ரயில்வே நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் சதாப்தி ரயிலில் ஒரு டீயின் விலைப்பட்டியல் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த புகைப்படத்தை பகிர்ந்த பயணி ஒருவர் 20 மதிப்புள்ள டீக்கு 50 ரூபாய் ஜிஎஸ்டி வசூலித்ததாக கூறியிருந்தார். இதன் மூலம் ஒரு டீ வாங்குவதற்கு மொத்தம் 70 ரூபாய் செலவிட்டதாக அவர் கூறியிருந்தார். சாதாரண டீக்கு 50 ரூபாய் வரி விதித்துள்ள ரயில்வே மீது பொதுமக்களுக்கு பெரும் கோபம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சமூக வலைத்தளங்களில் ஐ ஆர் சி டி சி ஐ தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் ராஜஸ்தானி அல்லது சதாப்தி போன்ற ரயில்களில் பயணிக்கும் பயணிகள் உணவு முன்பதிவு செய்து இருந்தால் அவர்களிடம் சேவை கட்டணம் வசூல் செய்யப்படாது. டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் உணவை முன்பதிவு செய்யவில்லை என்றால் அவருக்கு 50 ரூபாய் சேவை கட்டணம் செலுத்த வேண்டும். இந்த உத்தரவை ரயில்வே 2018 ஆம் ஆண்டு பிறப்பித்தது என விளக்கம் கொடுத்தார்.

ரயிலில் பயணிக்கும் போது உணவின் விலை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

காலை உணவு (சைவம்) – ரூ.40காலை உணவு (அசைவம்) – ரூ.50

சாப்பாடு சைவம் – ரூ.80

சாப்பாடு அசைவம் (முட்டை) – ரூ.90

சாப்பாடு அசைவம் (சிக்கன்) – ரூ.130

வெஜ் பிரியாணி (350 கிராம்) – ரூ.80

முட்டை பிரியாணி (350 கிராம்) – ரூ.90

சிக்கன் பிரியாணி (350 கிராம்) – ரூ.110

ராஜ்தானி/சதாப்தி/துரந்தோ ரயில்கள்:காலை தேநீர் – 35

காலை உணவு – 140

மதிய உணவு/இரவு உணவு – 245

மாலை தேநீர் – 140

ஸ்லீப்பர் வகுப்பு:

காலை தேநீர் – ரூ.15காலை உணவு – ரூ.65

மதிய உணவு – ரூ.120

இரவு உணவு – ரூ.120

மாலை தேநீர் – ரூ.50

ஏசி வகுப்பு:ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ நாற்காலி கார், ஏசி 3 மற்றும் ஏசி 2 ஆகிய ரயில்களில் உணவு விலை

காலை தேநீர் – ரூ.20

காலை உணவு – ரூ.120

மதிய உணவு – ரூ.185

இரவு உணவு – ரூ.185

மாலை தேநீர் – ரூ.90

Categories

Tech |