Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு பிரதமருக்கு கொலை மிரட்டல்… 45 வயது நபர் கைது… போலீசார் அதிரடி…!!!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்று நாரா நகரில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டெட்சுயா யாமகாமி என்ற நபர் முதுகு பக்கம் இருந்து அபே மீது சுட்டார். இந்த துப்பாக்கி சுட்டில் படுகாயம் அடைந்த அபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லி ஷியன் லாங்கை கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். பிரதமர் லி ஷியன் லாங்கை கொலை செய்து விடுவேன் என்று செய்தி நிறுவனத்தின் facebook பக்கத்தில் நேற்று பதிவை வெளியிட்ட 45 வயதான நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் லேப்டாப், டேப்லெட், 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |