தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நாட்டில் சில மாநிலங்களில் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தற்போது அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டமே நடைமுறையில் உள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் நடமுறையில் உள்ளது. இருப்பினும் தேசிய பென்ஷன் திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டத்துக்கும் பழைய ஓய்வு திட்டங்கள் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதை பார்ப்போம்.
பழைய ஒய்வூதிய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி வசதி உண்டு. பென்ஷனுக்காக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது. அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற பின் நிலையான பென்சன் கிடைக்கும். பென்ஷன் செலவுகளை அரசே எற்கும். பணி காலத்தில் அரசு ஊழியர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு பென்ஷன் கிடைக்கும் .
தற்போது உள்ள ஒய்வூதிய திட்டம் வருங்கால வைப்பு நிதி வசதி கிடையாது. பென்சனுக்காக அரசு ஊழியர்கள் சம்பளத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும். பணி ஓய்வு பெற்ற பின் நிலையான ஓய்வுதியத்துக்கு உத்தரவாதம் கிடையாது.
பழைய ஒய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் பணம் தேவைப்படும்போது கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனுக்கு வட்டி கிடையாது. பங்களிப்பு பென்ஷன் திட்டத்தில் இந்த வசதி இல்லை.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணி ஓய்வு பெற்றபின் அரசு ஊழியர் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% தொகை பென்சனாக தொடர்ந்து கிடைக்க்கும். ஆனால் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தில் உள்ள பணம் கொடுக்கப்படுவிட்டால் பின்னர் பென்ஷன் கிடைக்காது.
ஓய்வுதியதாரர் இறந்துவிட்டால் அவரது கணவன் அல்லது மனைவிக்கு ஓய்வு திட்டத்தை தொடர்ந்து பென்சனாக வழங்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தில் விருப்ப ஓய்வுதியம் திட்டம், இயலாமை ஓவியம், கட்டாய ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம், ஈடுகட்டும் ஒய்வூதியம் ஆகியவை கிடைக்கும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் வருங்கால வைப்பு நிதி, வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறும் வசதி, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் வசதி, பணி க்கால பணிக்கொடை, இறப்பு பணிக்கொடை, பணி ஓய்வு பணிக்கொடை ஆகியவை கிடைக்கும். ஆனால் பங்களிப்பு பென்சனில் இது எதுவுமே கிடைக்காது.
இதனையடுத்து அரசு ஊழியர்கள் பணியின் போது இறந்துவிட்டால் கடைசி ஊதியத்தில் 30% தொகை குடும்ப பென்சானாக கிடைக்கும். 7 ஆண்டுகளுக்குப் பின் பணியின் போது இறந்தால் கடைசி ஊதியத்தில் 50% குடும்ப பென்சனாக கிடைக்கும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாதாந்திர மருத்துவ படிப்பாக ரூ.300 கிடைக்கும். பங்களிப்பு பென்ஷன் திட்டத்தில் இந்த பணம் கிடைக்காது.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப பாதுகாப்பு நீதியாக ரூ.50,000 கிடைக்கும். இந்த பணம் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தில் கிடையாது.
80 வயதுக்கு மேல் உயிருடன் இருப்பவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓவியம் 20% முதல் 100% வரை அதிகமாக கிடைக்கும். இந்த பண பங்களிப்பு பென்ஷன் திட்டத்தில் கிடைக்காது .