Categories
சினிமா

“கோப்ரா” படத்தின் ஆடியோ ரிலீஸ்…. எப்போது தெரியுமா?…. படக்குழு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் திரைப்படங்களின் வெற்றியை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளபடம் கோப்ரா ஆகும். விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தபடத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். லலித்குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இத்திரைப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்துவரும் சூழ்நிலையில் ‘கோப்ரா’ படம் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி திரை அரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் யுகே மற்றும் ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை வலிமை, பீஸ்ட், விக்ரம் ஆகிய படங்களை ரிலீஸ் செய்த அகிம்சா எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. அண்மையில் இப்படத்தின் 3 லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கோப்ரா படத்தின் ஆடியோ ரிலீஸ் ஜூலை 11ஆம் தேதி சென்னையிலுள்ள ஒரு பிரபல மாலில் வெளியிட இருப்பதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |