பிரபல சீரியல் நடிகை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவி சீரியலுக்கு என பல கோடி ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் ஒருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருபவர் நடிகை தீபா. இந்த சீரியலில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் இவர் நடித்த வந்தார். அது மட்டும் இல்லாமல் ரெக்க கட்டி பறக்குது மனசு, பகல் நிலவு, ஆண்டாள் அழகர் என பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
தற்போது சன் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் மகனுடன் தனியாக வசித்து வரும் இவர் எடிட்டர் சாய் கணேஷ் பாபு என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் , விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.