பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரான பெர்டினான்ட் மார்கோஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மாதம் 30-ஆம் தேதி அன்று என்ற 64 வயதான பெர்டினான்ட் மார்கோஸ் அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ஊடக செயலாளராக இருக்கும் ரோஸ் பீட்ரிக்ஸ் குரூஸ் ஏஞ்சல்ஸ் நேற்று செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.
அவர், அதிபருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. வேறு எந்த பாதிப்புகளும் இல்லை. அவர் நலமாக தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் அதிபருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதிபரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.