Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடரும் வேலை நிறுத்த போராட்டம்… கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வாபஸ்…!!!

சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் சரக்கு பெட்டகங்களை உரிய இடங்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்பட லாரிகளுக்கு 80% வாடகை உயர்த்தி தரவேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக கன்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று மாலை சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்களுடன் சென்னை துறைமுக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 25% வாடகை உயர்த்தி தர முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் கன்டெய்னர் டிரைலர் ஆரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.

Categories

Tech |