Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“வாய்மேடு அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ”…. கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு….!!!!!

வாய்மேடு அருகே சரக்கு ஆட்டோ ஆற்றில் பாய்ந்ததில் டிரைவர் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேடு அடுத்த மருதூர் ஆண்டியப்பன் காட்டுப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(40) என்பவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ ஒட்டி வந்த நிலையில் நேற்று காலை தனது சரக்கு ஆட்டோவில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுக் கொண்டு தகட்டூர் கடை தெருவில் இருந்து தென்னடாறுக்கு சென்று கொண்டிருந்த பொழுது பஞ்ச நதிக்குளம் மேற்கில் சென்ற போது ஆட்டோ அவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று முள்ளியாற்றில் பாய்ந்ததில் செந்தில் குமார் வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கினார்.

இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் செந்தில்குமாரை மீட்டனர். பின் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில் வந்த மருத்துவ உதவியாளர் அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து அவரை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |