விராட் கோலி இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி. அதன் பிறகு இந்தியாவின் மூன்று வடிவ கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகியது பெரும் சர்ச்சையாக மாறியது. கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி பேட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஐசிசி டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த தரவரிசை பட்டியலில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக விராட் கோலி டாப் 10 இடத்தை இழந்தார்.
சமீபகாலமாக மோசமான பேட்டிங் செய்து வந்த விராட் கோலி 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் விராட் கோலி வரும் டி20 தொடர்களில் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று முன்னால் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “சிறப்பாக விளையாடாத கோலி அணியில் தொடர்ந்து நீடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது சவாலாக உள்ளது. ஒரு வீரர் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் சொதப்பினால் அவர் எத்தனை பெருமை கொண்டவராக இருந்தாலும் தொடர்ந்து விளையாட வாய்ப்பு வழங்க முடியாது. சிறப்பாக விளையாடும் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.