தென்மேற்கு பருவ மழையின் காரணமாக முக்கிய அணையின் கொள்ளளவு உயர்ந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. இந்த அணை கேரள வனப்பகுதியில் இருந்தாலும் ,அணையை பராமரிக்கும் பணிகள், நீரின் அளவை கணக்கிடுதல், மற்றும் தண்ணீர் திறத்தல் போன்றவற்றை தமிழக பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. இங்கிருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணை மொத்தம் 72 அடி கொள்ளளவை கொண்டது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் 50 அடி உயர்ந்துள்ளது. அதன்பிறகு சோலையார் அணையில் மின் உற்பத்தி நிலையம் இயக்கப்பட்டு 800 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதோடு நீர்படிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அணைக்கு வினாடிக்கு 2853 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அணையின் நீர்மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.