பேரூராட்சி செயல் அலுவலர் காலரா நோய் தொற்றின் பரவல் காரணமாக ஹோட்டல்களில் திடீர் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் தற்பொழுது காலா நோய் தொற்று பரவி வருவதன் எதிரொலியாக மாவட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சியில் இருக்கும் ஹோட்டல்களில் செயல் அலுவலர் குகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீர் ஆய்வு மேற்கொண்ட பொழுது காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும் எனவும் உணவுகளை சூடாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுரை செய்தார்.
மேலும் ஹோட்டல்களை தூய்மையாக பராமரிக்க தவறினால் ஹோட்டல் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் குகன் காலாரா முன்னெச்சரிக்கை குறித்து செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, பொதுமக்கள் திறந்தவெளியை கழிவறை போல் பயன்படுத்தக்கூடாது எனவும் காய்ச்சிய குடிநீர் மட்டுமே குடிக்க வேண்டும் எனவும் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.