Categories
சினிமா

விக்ரமின் “கோப்ரா” பட ஆடியோ வெளியீட்டு விழா…. எப்போது தெரியுமா?…. வெளியான செம மாஸ் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி பல கதாபாத்திரங்களில் மிரட்டலாக நடித்து வருகிறார். இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி படம் வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்தை திட்டமிட்டபடி வெளியிட படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதே நேரத்தில் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கோப்ரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதற்காக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை பினிக்ஸ் மாலில் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாக்கி உள்ள பாடல்கள் வெளியிடப்பட உள்ளது. அதனைதொடர்ந்து இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டியும், வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளார். மேலும் படத்தின் மியா, கே..எஸ். ரவிக்குமார், ரோபோ சங்கர், ரோஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடத்தி உள்ளனர்.

Categories

Tech |