டெல்லி பட்கல்மோர் மெட்ரோ நிலையத்தில், ரெயில் தண்டவாளத்தில் ஒரு பயணி நின்றதால் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. படர்பூர் பார்டரில் இருந்து ராஜா நஹர் சிங் (பல்லாப்கர்) செல்லும் வழித்தடத்தில், பயணி ஒருவர் சென்றதால், பட்கால் மோரில் பாதையில் மெட்ரோ ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மற்ற எல்லா மெட்ரோ ரெயில் வழித்தடங்களிலும் இயல்பான சேவை தொடருகிறது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த பயணி எதற்காக ரெயில் பாதையில் சென்றார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி மெட்ரோவில் இதுபோன்று தொடர் விபத்துகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.