Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக…. தொடங்கப்பட்ட இல்லம் தேடி கல்வி மையம்…. கலெக்டர் ஆய்வு….!!

இல்லம் தேடி கல்வி மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா தோற்று காரணமாக மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து கல்வி கற்க இயலாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் தமிழக முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும், கற்றல் திறனை மேம்பதுத்தவும் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சமுதாய நலக்கூடம் போன்ற பொது இடங்களில் மாணவ, மாணவிகளை பொது இடைவெளியை கடைபிடித்து அமர வைத்து தினசரி ஒரு மணிநேரம் முதல் 1½மணி நேரம் வரை தன்னார்வலர்களை கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாணவ – மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக 4,553 பெண் தன்னார்வலர்கள் மூலம் 62,083 மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே உள்ள இடங்களில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலமாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பெரியப்பட்டி நகராட்சி தொடக்க பள்ளி இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வரும் வகுப்பினை ,மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு அவர் கற்பிக்கப்பட்ட பாடங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

Categories

Tech |