பள்ளியில் அரிவாளுடன் நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் ஆராரியா பகுதியில் உள்ள ஜோகிஹாட் கிராமத்தில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென ஒருவர் சட்டை இல்லாமல் கையில் அரிவாளுடன் வகுப்பறைக்குள் நுழைந்தார். அதன்பின் ஆசிரியர்களிடம் புத்தகங்கள் மற்றும் சீருடைக்கு என்னுடைய மகளின் வங்கி கணக்கில் இதுவரை எதற்காக பணம் வரவில்லை என்று கேட்டு மிரட்டியுள்ளார். இதனைடுத்து வங்கி கணக்கில் உடனடியாக பணம் ஏறவில்லை என்றால் நான் மீண்டும் மாலை வருவேன் என்று கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.
இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜஹாங்கீர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அரிவாளுடன் வந்த நபர் அக்பர் என்பதும், தன்னுடைய மக்களுக்கு சீருடைக்கான பணம் வராததால் ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ஆசிரியர்களை அரிவாளை வைத்து மிரட்டியதும் தெரிய வந்தது.