Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு குறித்து அச்சம்….. மாணவர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!

நீட் தேர்வு அச்சத்தினால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மோகனசுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முரளி கிருஷ்ணா, கீர்த்திவாசன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் முரளி கிருஷ்ணா கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால் மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் முரளி கிருஷ்ணா நீட் தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருந்தார். வருகிற 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்வுக்கு நேற்று முன்தினம் ஹால் டிக்கெட் வந்தது. இதனை அடுத்து மீண்டும் நீட் தேர்வு எழுதி தன்னால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியுமா என முரளி கிருஷ்ணா பயத்தில் இருந்துள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து மாணவன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எனக்கு நீட் தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்குமா. என்னால் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியாது. என்னை மன்னிச்சிடுமா. நான் முடிந்த அளவு முயற்சி செய்தேன். ஆனால் மெடிக்கல் சீட் வாங்கும் அளவிற்கு என்னால் மதிப்பெண்கள் பெற முடியாது. உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேனுமா என அதில் உருக்கமாக எழுதியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |