Categories
தேசிய செய்திகள்

இனி EMI உயரப்போகுது…. 3- வது முறையாக வட்டியை உயர்த்திய பிரபல வங்கி…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் (HDFC Bank) கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதற்காக MCLR அடிப்படை வட்டி விகிதத்தை 0.20% உயர்த்தியுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி கடந்த மே மாதத்தில் தொடங்கி தற்போது வரை மூன்று முறை வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. அதனால் மொத்தமாக வட்டி விகிதம் 0.80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தியது.

அதனால் பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில் எச்டிஎப்சி வங்கி வட்டி விகிதத்தை மூன்றாவது முறையாக தற்போது உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டுக் கடன், கார் கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் போன்ற கடன்களை வாங்கி EMIசெலுத்துவோர் மற்றும் இனி கடன் வாங்குபவர்களுக்கு மாதம்தோறும் செலுத்தும் EMI தொகை உயரக்கூடும். ஏற்கனவே கடனை செலுத்தி வருவோர் மற்றும் புதிதாக கடன் வாங்குவோர் என இருவருக்குமே இந்த வட்டி விகிதம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |