மிகப்பெரிய தனியார்துறை வங்கியான எச்டிஎப்சி வங்கியின் கோடிக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று இருக்கிற்றது. எச்டிஎப்சி வங்கியானது பல தவணைக் காலங்களின் அனைத்து விதமான கடன்களுக்கான எம்சிஎல்ஆர்-ஐ அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலையில், இச்செய்தி நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களுக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது. எச்டிஎப்சி வங்கியானது 20 அடிப்படை புள்ளிகளை அதிகரித்து இருக்கிறது. வங்கியின் இந்த நடவடிக்கைக்குப்பின் எச்டிஎப்சி-யில் வீட்டுக்கடன், கார் கடன் மற்றும் தனிநபர்கடன் வாங்கிய வாடிக்கையாளர்களின் இஎம்ஐ-க்கான சுமை மேலும் அதிகரிக்கும்.
புது விகிதங்கள் ஜூலை 7 முதல் உடனே நடைமுறைக்கு வரும் விதமாக வங்கியால் அமல்படுத்தப்பட்டது. இதனிடையில் வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் ஒரு இரவுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 7.70 சதவீதம் ஆக இருக்கிறது. இதேபோன்று ஒருமாத கால அளவு கொண்ட எம்சிஎல்ஆர் விகிதமானது 7.75 சதவீதம் ஆகவும், 3 மாத காலத்திற்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.80 சதவீதம் ஆகவும், 6 மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.90 சதவீதம் ஆகவும் இருக்கிறது. அதேபோன்று ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் 8.05 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
எச்டிஎப்சி வங்கியானது சென்ற மாதம் மட்டும் 35 அடிப்படை புள்ளிகளை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாற்றம் ஜூன் 7 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. 1 மாதத்தில் 2-வது முறையாக எச்டிஎஃப்சி கட்டணத்தை மாற்றி இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் ரெப்போரேட் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்ட பின், பல வங்கிகளின் கடன்களின் விகிதங்கள் அதிகமாகியது என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் சென்ற ஜூன் 8ம் தேதி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தார். இதற்கு சில தினங்களுக்கு முன்பு திடீரென்று 40 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டது.
அந்த வகையில் சென்ற 1 மாதத்தில் 90 பைசா அதிகரித்து உள்ளது. முன்பாக ஜூன் 22 அன்று நாடு முழுதும் தற்போதுள்ள கிளைகளை இரட்டிப்பாக்கும் திட்டம் வங்கியால் அறிவிக்கப்பட்டது. வருடந்தோறும் சுமார் 1,500 -2,000 கிளைகள் திறக்கப்படும் என வங்கி தெரிவித்தது. இதன் வாயிலாக வங்கியின் நெட்வொர்க் வரும் 3 முதல் 5 வருடங்களில் இரட்டிப்பாகும். இப்போது வங்கிக்கு நாட்டில் 6,000-க்கும் அதிகமான கிளைகள் இருக்கிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப பார்த்தால் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓ.இ.சி.டி.,) நாடுகளை விட, வங்கியின் கிளைகளின் எண்ணிக்கையானது குறைவாக இருப்பதாக வங்கி அதிகாரி தரப்பில் கூறப்பட்டது.