அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சொத்து குவிப்பு புகாரின் பேரில், சோதனை நடக்கிறது. காமராஜ் உறவினர், நண்பர் வீட்டில் 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்து மதிப்பு வெறும் ஆறு ஆண்டுகளில் 500 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது