ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஐரோப்பாவின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றாக இருக்கிறது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகவும் இருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆல்ப்ஸ் மலைத் தொடருக்கு சென்று பனிச்சருக்கு மற்றும் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். இந்த மலை தொடரில் மார்மலடா என்ற சிகரம் அமைந்துள்ளது. இந்த சிகரம் இத்தாலியில் இருக்கிறது. இங்கு கடுமையான வெயில் தாக்கம் காரணமாக திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
இந்த பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பனிச்சரிவில் சிக்கியுள்ள 13 பேரை மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை இத்தாலி நாட்டிலுள்ள டிரெண்டினோ சிறப்பு தன்னாட்சி அமைப்பின் தலைவர் மொரிசியோ புகாட்டி வெளியிட்டுள்ளார்.