Categories
தேசிய செய்திகள்

கிசான் கிரெடிட் கார்டு மூலம்….. கிராமப்புற மக்களுக்கு கடன் உதவி….. நிதியமைச்சர் சூப்பர் தகவல்….!!!!!

விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. கிராமப்புற மக்களுடைய வருமானத்தை தொடர்ந்து அதிகரிப்பதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது. கிராமங்களில் உள்ள மக்களுடைய வருவாயை அதிகரிக்க கிஷன் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதாக கடன் வழங்குமாறு பொதுத்துறை வங்கிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளோடு நடைபெற்ற ஆலோசனையில், தொழில்நுட்பத்தை மேம்படுத்த பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு உதவுமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

இதன் பிறகு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத் ரூபாலா பேசுகையில், கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை நிதியமைச்சர் மதிப்பாய்வு செய்து இந்த துறைக்கு நிறுவன கடன்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து விவாதித்துள்ளார். நாட்டில் மொத்தம் 43 பிராந்திய வங்கிகள் இருக்கின்றன. இந்த வங்கிகள் ஆர்ஆர்பி சட்டம் 1976 இன் கீழ் உருவாக்கப்பட்டு சிறு விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற கைவினைகளுக்கு கடன் மற்றும் இதர வசதிகளை வழங்குகிறது.

இவற்றை மேம்படுத்த தற்போது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் வாயிலாக கிராம மக்களுக்கு அதிக உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் மீன்பிடி மற்றும் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |