Categories
தேசிய செய்திகள்

இனி இந்த நாட்களில் “புத்தகப்பை வேண்டாம்”…. பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…..!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புபேஷ் பாகல் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து அங்கு பள்ளிக்கல்வித்துறை நேற்று புதுமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி சனிக்கிழமை நடைபெறும் பள்ளி நாட்களில் மாணவர்கள் புத்தகப் பை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முழுவதும் யோகா, உடற்பயிற்சி,விளையாட்டுக்கள் மற்றும் கலை பண்பாட்டு வகுப்புகள் நடைபெறும் என கூறியுள்ளது.

மாணவர்கள் பள்ளி கல்வியை விருப்பத்துடன் படிக்கும் நோக்கத்திலும் கல்வி செயல்முறை சார்ந்ததாக மாற்றும் விதமாகவும் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தி கல்வியில் ஈடுபாட்டை வளர்க்க உதவும் என அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |