Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! பொறியியல் கல்லூரி தரவரிசை பட்டியல் வெளியீடு….. எந்தெந்த கல்லூரி தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் உயர் கல்வியை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளை சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கிண்டி பொறியியல் கல்லூரி முதல் இடத்தையும், எம்ஐடி வளாக குரோம் பேட்டை பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், கோவை PSG மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. அரியலூரில் உள்ள KKC பொறியியல் கல்லூரி தரவரிசை பட்டியல் கடைசி இடத்தை குறித்துள்ளது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தரவரிசை பட்டியலை பார்த்து கல்லூரிகளில் தேர்வு செய்யலாம்.

Categories

Tech |