கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாண்டியன் பூங்கா பகுதியில் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் கிணறு உள்ளது நேற்று குடிநீர் விநியோகம் செய்வதற்காக சென்ற ஊழியர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் பாம்பு ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதை ஊழியர்கள் பார்த்தனர்.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சுமார் 6 அடி நீளமுடைய சாரை பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன்பிறகு அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.