Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவனை கொன்ற வழக்கு…. மனைவி, கள்ளக்காதலனுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருகோணம் பகுதியில் மணிகண்டன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காயத்ரிதேவி(25) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் காயத்ரிதேவி கரூர் மாவட்டத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்த போது உறவினரான கமலக்கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மணிகண்டன் காயத்ரிதேவியை கண்டித்துள்ளார். இதனை அடுத்து கமலக்கண்ணன் தனது நண்பரான ரூபன் என்பவரது உதவியுடன் மணிகண்டனை அடித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காயத்ரிதேவி, கமலக்கண்ணன், ரூபன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கமலக்கண்ணன் மற்றும் காயத்ரிதேவி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரூபன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |