செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஸ்டாலினுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. மத்திய அரசாங்கம் செய்வதெல்லாம் தான் செய்தது போல படம் காட்டுவது. ஏனென்றால் இப்போது உக்கரைனில் தமிழக மருத்துவ மாணவர்களை கூட்டிட்டு வந்தது யாரு ? திருச்சி சிவாவா? யாரு? மத்திய அரசாங்கம். பக்கத்தில் இருக்கின்ற நாலு நாட்டிலும் நான்கு அமைச்சரை பி.கே. சிங், ஜெய்சங்கர் அவர்களே எல்லோரும் உட்கார்ந்து…
போர் நிறுத்தம் அறிவிக்க சொல்லி, நான் என் நாட்டு குழந்தைகளை கூட்டிட்டு வர வரைக்கும் நீங்கள் இருவரும் சண்டை போடக்கூடாது என்று மோடி அவர்கள் சொல்லி, அதை உக்கிரேனும், ரஷ்யாவும் கேட்டு ஒரு குழந்தை கூட… கர்நாடகாவில் ஒரு பையன் மட்டும் பாதிக்கப்பட்டான். மற்றவர்களை பாதிப்பில்லாமல் கொண்டு வந்தோம். ஆனால் ஓராண்டு பற்றி சட்டமன்றத்தில் பேசும்போது ஸ்டாலின் என்ன சொல்கிறார்,
தமிழகத்தை சேர்ந்த 10,300 மாணவர்களை கீறல் இல்லாமல் கொண்டு வந்தேன் என்று…… பக்கத்து வீட்டில் குழந்தை பிறந்தால் வாழ்த்து சொல்றதோட நிப்பாட்டிக்கொள்ள வேண்டும், நான் தான் காரணம் பேசலாமா ? அந்த மாதிரியாக சட்டமன்றத்தில்… உக்கிரன் மாணவர்களை கொண்டு வந்தது 100 சதவீதம் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுடைய ஆட்சியின் ஆளுமை, அதன் திறமை.இதில் ஸ்டாலினுக்கோ, தமிழ்நாடு அரசாங்கத்திற்கோ எள்ளுமுனை அளவு கூட பங்கு இல்லை. அதனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது ? 2026 வரை இருக்கும் என்று, அப்படித்தான் உதவ் தாக்கரே நினைத்தார் ஆனால் இருக்கிறாரா?.அதனால் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இலங்கை அரசாங்கம் பல காரணங்கள் சொல்லி இருக்கிறது. நாங்கள் எங்கள் நாட்டு மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சொல்கின்ற கருவியை பயன்படுத்தினால், நாங்கள் கைது செய்யவில்லை என்றால்…
எங்கள் நாட்டு மீனவர்கள் எங்களை கேள்வி கேட்பார்கள். நாங்கள் இரண்டு பக்கமும் மாட்டிக்கொள்வோம் என்று… அதனால் இதுவரைக்கும் பாதிப்பில்லாமல் எல்லாரையும் விடுதலை செய்திருக்கும் அதோடு சந்தோஷப்பட வேண்டும். அனாவசியமாக அறிவாலயம் அதனுடைய ஏஜென்ட் மாதிரி கேள்வி கேட்கக் கூடாது என தெரிவித்தார்.