தொழுநோய் விழிப்புணர்வு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் அரசினர் ஆண்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாம் உடற்கல்வி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்டது. இதற்கு தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் ஜெய நந்தினி தலைமை தாங்கினார்.
இவர் தொழுநோயை சிறுவயதிலேயே கண்டுபிடிக்காவிட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார். அதன்பிறகு தொழுநோய் அறிகுறிகள் இருந்தால் அதை உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் ஊனம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது எனவும் கூறினார். இதில் பள்ளியின் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.