நடிகை சமந்தா தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2007இல் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தாரிண்டிகி தாரேதி (2013), கத்தி (2014) போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர்பெற்ற, கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இவரது அழகும் துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் வைத்திருக்கின்றன.
இந்நிலையில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேறு ஒருவரின் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேறு ஒருவரிடம் புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேறு ஒருவரின் புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் முயற்சிகள் நடப்பதாக சமந்தாவின் மேலாளர் தெரிவித்துள்ளார்.