வீட்டுக்கடன் வாங்கும்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேங்கில் எவ்வளவு வட்டிவிகிதங்கள் போடப்படுகிறது என்பது தொடர்பாக தெளிவாக கேட்டறிந்து கொள்ளவேண்டும். அப்போது வட்டிவிகிதம் குறைவாக இருப்பின் உடனடியாக அந்த வங்கியில் கடன் வாங்கிவிடகூடாது. கடன் கொடுப்பதற்கு முன்னதாக இதர கட்டணங்கள் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
இதையடுத்து கடனை பெற்றுக் கொண்டதும் ஒவ்வொரு மாதமும் நீங்கள் குறிப்பிட்ட தொகையை தவணையாக செலுத்த வேண்டும். அவ்வாறு தவணைத் தொகையை செலுத்தாவிட்டால் வங்கி உங்களுக்கு அபராதம் விதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் வாங்கிய கடன் தொகையை குறிப்பிட்ட தவணை காலத்துக்கு முன்பாகவே செலுத்த விரும்பினாலும் வங்கி உங்களுக்கு எந்த வித கட்டண சலுகையும் வழங்காது என்பதை நினைவில்கொள்ளவேண்டும். இதனிடையில் ஒருசில வங்கிகள் கடன்தொகையில் 0.50 சதவீத செயல்பாட்டு கட்டணத்தினை வசூலிக்கிறது. அத்துடன் மேலும் சில வங்கிகள் 7 சதவீதம் வரை கடன் தொகையில் செயல்பட்டு கட்டணத்தை வசூலிக்கிறது.