Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு…. ஓராண்டு பணி நீட்டிப்பு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மட்டும் 10,331 இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் எப்போதும் ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் தான் நிரப்பப்படும். ஆனால் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூலமாக பணியிடங்களை நிரப்ப கால தாமதமாகும் என்பதால் தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பணியிடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் சிலர் பணி ஓய்வு பெற உள்ளனர்.ஏற்கனவே பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்று கிளம்பி விட்டால் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி விடுவர்.இதனால் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இந்த கல்வியாண்டின் இறுதிவரைக்கும் பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இந்த கல்வியாண்டின் இறுதி வரைக்கும் மறு நீயமான அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது . அது மட்டுமல்லாமல் பணி நீட்டிப்பு வழங்கப்படும் ஆசிரியர்களின் பண்பு மற்றும் நடத்தைகள் மாணவர்களுக்கு திருப்திகரமாக இருக்க வேண்டும் என்றோம் தொடர்ந்து இந்த கல்வியாண்டு முழுக்க பணிபுரியும் வகையில் ஆசிரியர்கள் உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |