Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல காமெடி நடிகரின் படம்…. கடைசி நேரத்தில் மாறிய டைட்டில்…. வெளியான புதிய தகவல்…!!!

பிரபல காமெடி நடிகரின் படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு இயக்குனர் சுவதீஸ் இயக்கத்தில் கண்டக்டர் நேசமணி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயினாக ஓவியா நடித்துள்ளார். இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் செம டிரெண்டானது. ஏனெனில் கண்டக்டர் நேசமணி என்பது பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு கதாபாத்திரத்தின் பெயராகும். எனவே வடிவேலுவுக்கு மதிப்பளிக்கும் வகையில் தற்போது படக்குழுவினர் கண்டக்டர் நேசமணி என்ற பெயரை மாற்றி வைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். அதன்படி பூமர் அங்கிள் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |