ஆப்கான் மண்ணிலிருந்து பிற நாடுகள் மீது போர் தொடுக்க மாட்டோம்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த தலிபான்கள் அரசின் ஹிபெதுல்லா அஹ்ஹண்டஸ்டா தலைவராக உள்ளார். இந்நிலையில், இஸ்லாமிய மத நிகழ்வுகளில் ஒன்றான ஈத் – அல் – அல்ஹா தொடர்பாக தலிபான் தலைவர் ஹிபெதுல்லா காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார்.
இந்த உரையாடலில் அவர் கூறியதாவது, “எங்கள் அண்டை நாட்டினருக்கும், பிராந்தியத்திற்கும் உலகத்திற்கும் நாங்கள் உறுதிமொழி ஒன்றை அளிக்கிறோம். ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த நாங்கள் யாரையும் அனுமதிக்கமாட்டோம். அதே சமயத்தில் எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.